ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ஜெயங்கொண்டம், ஆக. 10: போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி இணைந்து நடத்தினர். தலைமை ஆசிரியர் தவிக்குமார் தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பேரணி, அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கி ஜெயங்கொண்டம் கடைவீதியில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
பேரணியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு அட்டைகள், பேனர்கள் உள்ளிட்ட வைகள் கையில் ஏந்தியபடி பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான வாசகங்களை கோஷம் எழுப்பியவாறு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரணி நிறைவில் பள்ளி மாணவர்கள் பள்ளியில் போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பாலகுமாரன், உமாதேவி, கலையரசி, ரேகா, ஜோதி பரப்புரையாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக களப்பணி உதவியாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.