தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி முதல் ஜமாபந்தி தொடக்கம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 7: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 14ம்தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1433ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் கீழ்கண்டவாறு வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமனம் செய்து, மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, வாலாஜாபாத் வட்டத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், 14ம்தேதி மற்றும் 18ம்தேதி முதல் 21ம்தேதி வரை என 5 நாட்கள் நடைபெறும். குன்றத்தூர் வட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 14ம்தேதி, 18ம்தேதி முதல் 21ம்தேதி வரை மற்றும் 25ம்தேதி என 6 நாட்கள் நடைபெறும்.காஞ்சிபுரம் வட்டத்தில், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 14ம்தேதி, 18ம்தேதி முதல் 21ம்தேதி வரை மற்றும் 25ம்தேதி என 6 நாட்கள் நடைபெறும். பெரும்புதூர் வட்டத்தில் பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் 14ம்தேதி மற்றும் 18ம்தேதி முதல் 21ம்தேதி வரை என 5 நாட்கள் நடைபெறும். உத்திரமேரூர் வட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் 14ம்தேதி, 18ம்தேதி முதல் 21ம்தேதி மற்றும் 25ம்தேதி முதல் 27ம்தேதி வரை என 8 நாட்கள் நடைபெறும்.

மேலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் முன்னதாகவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது, வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும், முன்கூட்டியே கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வரும் 14ம்தேதி முதல் 27ம்தேதி வரை தீர்வாய நிகழ்ச்சியினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News