பெரும்பச்சேரி கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு திருவிழா
மானாமதுரை, மே 22: மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் நாளை சமயன சுவாமி கோயில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது. மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் சமயன சுவாமி கோயில் உள்ளது. அக்கோயில் அருகே உள்ள மைதானத்தில் பல நூறு ஆண்டுகளாக வைகாசி மாதத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா பாரம்பரிய முறைப்படி சாதிபேதமற்ற முறையில் சிறப்பாக நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டில் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வது வழக்கம்.
இந்தாண்டு ஜல்லிக்கட்டு திருவிழா நாளை மே 23 நடைபெறவுள்ளது. இதற்காக அரசு அனுமதி பெறுவது, கோயிலுக்கு வர்ணங்கள் பூசுவது, ஜல்லிக்கட்டு மைதானம் சீரமைப்பு, பந்தல் அமைப்பது, பரிசுகள் வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.