ஒன்றிய அரசைக் கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
தேனி, ஜூலை 10: ஒன்றிய பாஜ அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தது. இதனையொட்டி தேனி மாவட்டத்தில், ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறை அரசு ஊழியர்கள் ஆசிரியர் கூட்டமைப்பினர் அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என கோஷங்களை எழுப்பினர்.