திண்டுக்கல்லில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கொடியேற்று விழா
திண்டுக்கல், ஜூலை 3: திண்டுக்கல்லில் பழநி ரோடு எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் பவள விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. காப்பீட்டு ஊழியர் சங்க மதுரை கோட்ட சங்க துணை தலைவர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் சங்க கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார். கிளை 1 தலைவர் பாரத் உறுதிமொழியை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் வளர்ச்சி அதிகாரிகள், முதல்நிலை அதிகாரிகள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். கிளை இரண்டு தலைவர் தங்கவேலு நன்றி கூறினார்.
Advertisement
Advertisement