கோரிக்கையை வலியுறுத்தி காப்பீடு சங்க ஊழியர்கள் போராட்டம்
தஞ்சாவூர், ஜூலை 10: தஞ்சை கோட்ட பொது செயலாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். ஓய்வு ஊதிய சங்க கோட்ட தலைவர் புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். பொது காப்பீடு ஊழியர்கள் சங்க மண்டல பொது செயலாளர் பிரபு வாழ்த்துரை வழங்கினார். கோட்ட தலைவர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் இணை செயலாளர் சரவணா பாஸ்கர் நன்றி கூறினார். இதில் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 மாதமொன்றிற்கு நிர்ணயம் செய்ய வேண்டும். கார்ப்பரேட் வரியை அதிகப்படுத்திட வேண்டும். சொத்து வரி மற்றும் பரம்பரை வரியை மீண்டும் கொண்டு வந்திட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பவும் அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவுகட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககள் வலியுறுத்தப்பட்டன.