சாலைப்பணிகளை ஆய்வு
சிவகங்கை புறவழிச்சாலையில் 10.6 கி.மீ தூரம் நடைபெறும் சாலைப்பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். சாலையில் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு சாலையின் தரம், பொருட்களின் சேர்க்கை, சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பிரிவு தளங்கள் உள்ளிட்டவை குறித்து பரிசோதணை செய்தனர். சாலை ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கூடுதல் கட்டிடப்பணிகள், சிவகங்கை, மேலூர் சாலையில் நடைபெறும் சாலைப்பணிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர். உடன் அரசு செயலாளர் செல்வராஜ், கலெக்டர் ஆஷாஅஜித், எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், சிறப்பு அலுவலர் சந்திரசேகர், தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் இருந்தனர்.