தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 ஆயிரத்து 41 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் தகவல் வேலூர், திருவண்ணாலை உட்பட 4 மாவட்டங்களில்

வேலூர், மார்ச் 6: வேலூர், திருவண்ணாலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 3 ஆயிரத்து 41 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு தரமான காய்கறி, பழ பயிர்களின் விதைகள் மற்றும் இதர பயிர்களின் விதைகள் நியாமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும், மாநிலம் முழுவதும் சிறப்பு அமைக்கப்பட்டது. அதன்படி, தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் மணி தலைமையிலான விதை ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு விதை பண்ணைகளில் கடந்த 3, 4ம் தேதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் இருந்த விதைக் குவியல்களிலிருந்து 24 நெல் விதை மாதிரிகள், 2 வீரிய மக்காச் சோளம் விதை மாதிரிகள், 3 வீரிய கம்பு விதை மாதிரிகள், உளுந்து விதை மாதிரி, 10 பருத்தி விதை மாதிரிகள், 2 திவனப்பயிர் விதை மாதிரிகள், 2 கீரை விதை மாதிரிகள், 5 வீரிய வெண்டை விதை மாதிரிகள், 2 கொத்தவரங்காய் விதை மாதிரிகள், முள்ளங்கி, வீரிய தக்காளி, வீரிய மிளகாய், தனியா, சுரக்காய் தலா ஒரு விதை மாதிரிகள் என மொத்தம் 56 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வேலூர், திருவண்ணாமலை விதை பரிசோதனை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சிறப்புக்குழு ஆய்வின் போது விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதைக் குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள்.

தனியார் ரக விதைகளுக்கான பதிவுச் சான்றுகள். விதைப் பகுப்பாய்வு முடிவறிக்கைகள், இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை ரசீது ஆகியவைகள் விதைச்சட்டப்படி பராமரிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தனியார் விதை விற்பனை நிலையங்களில் 10 விதைக் குவியல்களில் மேற்படி உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் ₹2 லட்சத்து 20 ஆயிரத்து 25 மதிப்பிலான 3 ஆயிரத்து 41 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது, விதை ஆய்வு துணை இயக்குநர் பாலாஜி மற்றும் விதை ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News