விஷஜந்துக்கள் அதிகரிப்பு
Advertisement
வருசநாடு, மே 26: வருசநாடு அருகே தும்மக்குண்டு மலை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் விஷஜந்துக்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், செவிலியர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர மிகவும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement