வத்தலக்குண்டு மார்க்கெட்டில் வாழை தார் வரத்து அதிகரிப்பு
வத்தலக்குண்டு, நவ. 19: வத்தலக்குண்டுவில் உள்ள வாழைக்காய் மார்க்கெட்டுக்கு நேற்று வழக்கத்தைவிட கூடுதலாக வாழை தார்கள் வரத்து இருந்தது. தொடர் திருமண முகூர்த்தங்கள் இருப்பதால் நல்ல விலை கிடைக்குமென்று விவசாயிகள் அதிகளவில் வாழைத்தார்கனை வெட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால் வழக்கத்தைவிட வாழை தார்கள் வரத்து கூடியது. பெங்களூர், சென்னை, கோவை போன்ற நகரங்களிலிருந்து வந்திருந்த மொத்த வியாபாரிகள் ஏலம் கேட்டனர்.
இதில் ஒரு தார் செவ்வாழை ரூ.700க்கும், ரஸ்தாலி ரூ.400க்கும், நாடு ரூ.500க்கும், பூவன் ரூ.200க்கும் ஏலம் போனது. வாழை தார் வரத்து கூடியதால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வாழை விவசாயி மரியலூயிஸ் கூறுகையில், ‘தொடர் முகூர்த்தம் மற்றும் சபரிமலை சீசன் ஆரம்பித்திருப்பதால் வரும் வாரங்களில் வாழை தார் விலை கூடும் என நம்பிக்கையில் காத்திருக்கிறோம்’ என்றார்.