தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்குன்றம் துணை மின் நிலையத்துக்கு இடத்தை தேர்வு செய்வதில் குளறுபடி; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

Advertisement

புழல், மே 27: செங்குன்றம், வடகரை, கிரான்ட் லைன், அழிஞ்சுவாக்கம், தீர்த்தங்கரையம்பட்டு, புள்ளி லைன், பாடியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் வீடுகள், தொழிற்சாலைகள், நெல் அரிசி ஆலைகள் உள்ளன. இந்நிலையில் மின்சாரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல நேரங்களில் குறிப்பாக கோடை காலங்களில் வீடுகளில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு போதுமான அளவிற்கு மின்சாரத்தை செங்குன்றம் மின்சார வாரியம் வழங்க மிகவும் சிரமப்படுகிறது.

இதற்காக செங்குன்றம் மின்சார வாரியம் சார்பில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் சுமார் 50 சென்ட் நிலம் மின்சாரத் தேவைக்காக துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடம் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் கால்நடைத் துறையில் துணை மின் நிலையம் அமைய தடையில்லா சான்று வழங்கப்பட வேண்டும் என்பதால் இந்த திட்டப்பணி தாமதமாகிறது.

எனவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து துணை மின் நிலையம் அமைக்க தனி கவனம் செலுத்தி மாநில கால்நடை துறையிலிருந்து தடையில்லா சான்றிதழை செங்குன்றம் மின் வாரியத்திற்கு பெற்றுத் தந்து செங்குன்றம் சுற்று வட்டார பகுதி மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News