கரூர் மேற்கு ஒன்றிய பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் நிறைவுபெற்ற புதிய பணிகள் தொடக்க விழா
வேலாயுதம்பாளையம், ஜூலை 15: கரூர் மேற்கு ஒன்றிய ஒன்றிய பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் நிறைவுபெற்ற, பணி தொடக்க விழா எம் எல் ஏ இளங்கோ தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் கரூர் மேற்கு ஒன்றிய பகுதியில் நிறைவு பெற்ற மற்றும் புதிதாக பணி திட்ட தொடக்க விழா ஒன்றிய செயலாளர் வளர்மதி சிதம்பரம் தலைமையில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
கோம்புபாளையம் ஊராட்சி, வேட்டமங்கலம் ஊராட்சி, திருக்காடுதுறை ஊராட்சி ஆகிய பகுதிகளில் பணிகள் நடைபெற்றது.அனைத்து பகுதிகளிலும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு புதிய பணிகளை பூமி பூஜை செய்து வைத்தும், நிறைவு பெற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.அதன்படி, நொய்யல் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் ரூ.13.37 திறப்பு விழாவும்,சேமங்கியில் சமுதாயக்கூடம் பதிப்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் பணி தொடக்க விழா, கவுண்டன்புதூரில் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் பணி துவக்க விழா, திருக்காடுதுறை கிராமத்தில் ரூ.16.63 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா, ரூ.28.01 லட்ச மதிப்பில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா, அதியமான்கோட்டை சமுதாயக்கூடம் ரூ.24.50 லட்சம் மதிப்பில் பணி துவக்க விழா, ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, வேட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில்ஆதி திராவிடர் தெருவில் சமுதாயக் கூடம் பணி துவக்க விழா நடைபெற்றது. கரூர் மேற்கு ஒன்றிய பகுதியில் மொத்தம் ரூ.1.72 கோடி மதிப்பில் நிறைவு பெற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு பூஜை நிகழ்ச்சி உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டார்.திட்டத்தைப் பெற்றுத் தந்த மாவட்ட கழக செயலாளர் செந்தில்பாலாஜி எம்எல்ஏவை மக்கள் பாராட்டினர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய துணைச் செயலாளர் சித்தார்த், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணன், குணசங்கர், மண்டல நிர்வாகிகள் தர், சுப்பிரமணியன், மணிவண்ணன், மோகன், கிளைச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், வேலுச்சாமி, இளைஞரணி சதீஷ்குமார் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.