தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணியாளர் வருகையை உறுதி செய்ய 100 நாள் வேலைத் திட்டத்தில் பயோ - மெட்ரிக் முறை அமல்

 

Advertisement

மன்னார்குடி, மே 30: 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்வ தற்கு பயோ - மெட்ரிக் முறை அமல்படுத்தி உள்ளதற்கு பசுமை சூழல் பாது காப்பு இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிரா மப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயம், நீரா தாரங் களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற் பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2005 ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் மூலம் செயல் படுத்தப்பட்டுவரும் இந்த திட்டத்தில் ஆண்-பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப் படுகி றது. இத்திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய நிழற்படம் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை காரணமாக வருகை பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வெளிவந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய பயோ - மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும் என பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டமானது தமிழ்நாட்டில் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு பணியாளர்களின் வருகை பதிவை உறுதி செய்யும் வகையில் பணித்தளத்தில் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. இதன்முலம், இந்த திட்டத்தில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு உண்மை யான பயனாளிகள் பயன்பெறுவது உறுதி செய்யப்படும். எனவே, பயோ - மெட்ரிக் முறை அமல்படுத்தி உள்ளதை பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் வரவேற்கிறது. இவ்வாறு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News