தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக சென்று வாக்காளர் விவரம் சரிபார்க்கும் பணி தொடக்கம் : கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, ஆக. 30: செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடுவீடாக சென்று வாக்காளர் விவரம் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளதாக கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025ன்படி, முதல் கட்டமாக, கடந்த 20ம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர் விவரம் சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணி வரும் அக்டோபர் 18ம் தேதிவரை நடைபெறுகிறது.

Advertisement

இதையடுத்து, அக்டோபர் 29ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்களில் வெளியிடப்படுகிறது. தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து மேற்குறிப்பிட்ட அலுவலகங்களிலோ அல்லது தங்களின் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில், சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். அதில், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வுக்கு டிசம்பர் 24ம் தேதி காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. பின்னர், வரும் 2025ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும்போது பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முகவரிச்சான்றாக நீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு, ஆதார் அடையாள அட்டை, வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட், விவசாய அடையாள அட்டை, வாடகைக் குத்தகைப் பத்திரம், வீடு விற்பனைப் பத்திரம் ஆகியவற்றில் ஏதெனுமொன்றை ஆதாரமாக அளிக்கலாம். எனவே, இவ்வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று கலெக்டர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement