டூவீலரில் சென்று வீடு, வீடாக கஞ்சா சப்ளை
மேட்டூர், மே 15: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காவேரிகிராஸ் பகுதியில், டூவீலரில் சென்று வீடு, வீடாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, நேற்று மேட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீசார், 2 டூவீலர்களில் கஞ்சா பொட்டலங்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டூர் மீனவர் தெருவை சேர்ந்த ராஜா(40), தாரமங்கலம் ராமிரெட்டிபட்டியை சேர்ந்த கார்த்தி (42) ஆகியோரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 3.50 கிலோ கஞ்சா மற்றும் 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement