வாலாஜாபாத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் வீட்டு உபயோக பொருட்கள் பழுது
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வாலாஜாபாத் பேரூராட்சியின் மையப் பகுதியாக விளங்குவது பேருந்து நிலையம்.
இதன் அருகாமையில் வினோதா நகர் குடியிருப்பு பகுதி உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு மின்விநியோகம் அவ்வப்பொழுது தடை செய்யப்படுவது மட்டுமின்றி மின்னழுத்தமும் குறைந்து காணப்படுகின்றன. இதனால், வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, ஏசி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாளுக்கு நாள் பழுதாகி காணப்படுகின்றன. இங்கு விநியோகிக்கப்படும் தாழ்வான மின் அழுத்தம் குறித்து பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் முறையாக பராமரிக்கப்படாததால் இது போன்ற மின்னழுத்தம் குறைவாக விநியோகிக்கப்படுகிறது. இதுபோன்ற நிலையில் வினோதா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள், வங்கிகள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்படும் நிலையில் அதற்கேற்ப புதிய டிரான்ஸ்பர் அமைத்து சீரான மின் விநியோகம். வழங்கிட வாலாஜாபாத் மின்வாரிய துணை மின் நிலைய அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.