ஆண்டாள் தேரோட்டம் 28ம் தேதி விடுமுறை
விருதுநகர், ஜூலை 24: ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு 28ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வௌியிட்ட தகவல்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு 28ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
அதை ஈடு செய்யும் வகையில் ஆக.9(2வது சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள ஜூலை 28ல் மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் ஆகியவை அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவித்துள்ளார்.