நெடுஞ்சாலைத்துறையினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி தலைமை வகித்தார். இணைச்செயலர்கள் சின்னப்பன், கணேசன், பாண்டி துணைத்தலைவர்கள் சுதந்திரமணி, வீரய்யா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழங்கி தீர்ப்பை செயல்படுத்துவதும் நியாயம்தான். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதைத் தவிர்த்து சாலைப் பணியாளர்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.