கோத்தகிரியில் சாரல் மழை
கோத்தகிரி, ஜூலை 11: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டு, பிற்பகல் நேரங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.
இதனால் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பெட்டட்டி, வெஸ்ட் புரூக், பாண்டியன் பார்க், ஒரசோலை, தாந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து காலநிலையில் மாற்றம் ஏற்படாமல் மாலை நேரத்திலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள், பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் கடும் குளிரில் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.