டயர்கள் எரிப்பதால் சுகாதார சீர்கேடு
Advertisement
அரூர்:அருர்-சேலம் பிரதான சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பெரியார் நகர் பகுதியில் அதிகளவில் பழைய இரும்பு கடைகள், பட்டறைகள் உள்ளது.
இங்கு இரும்பு கம்பி, டயர்கள், வயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை தொழிலாளர்கள் தனிதனியாக பிரிக்கின்றனர். இதில் தேவையில்லாத பிளாஸ்டிக், டயர்கள் தொட்டம்பட்டி பெரிய ஏரியில் எரிப்பதால் கரிய நிற நச்சு புகை வெளியேறுகிறது. அந்த நச்சு புகையை சுவாசிக்கும் பலருக்கு தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் ஏற்படுகிறது.
இந்த நச்சு புகையை தொடர்ந்து சுவாசித்தால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். எனவே மாவட்ட நிர்வாகம் டயர்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
Advertisement