அனுமன், கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை
ஓசூர், ஜூலை 11: பேரிகை அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னராய சுவாமி கோயிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் பிரதிஷ்டை வைபவம் நடைபெற்றது. சூளகிரி அருகே எஸ்.தட்டனப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சென்னராய சுவாமி கோயிலில், வேதாந்த தேசிகரின் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டாபனம் நடைபெற்றது. மேலும், பெரிய திருவடி மற்றும் சிறிய திருவடி எனப்படும் அனுமான் மற்றும் கருடாழ்வார்களின் உற்சவமூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.