தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை சீசன் துவங்கிய நிலையில் வழிகாட்டி பலகைகளை புதுப்பிக்க வேண்டும்

குன்னூர், ஏப்.23: தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.  அங்கு நிலவி வரும் குளிச்சியான கால நிலை, இயற்கை காட்சிகள், சுற்றுலா இடங்கள் ஆகியவற்றை பார்வையிட விடுமுறை காலங்கள், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக நீலகிரிக்கு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சம் பேரும், ஆண்டு முழுவதும் 30 லட்சம் பேரும் வந்து செல்கின்றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள், தங்கள் செல்ல வேண்டிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சாலை ஓரம் நின்று வழி கேட்கின்றனர்.

Advertisement

இப்படி சாலையில் வாகனங்களை நிறுத்தி வழி கேட்பதால் சில இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி பெயர் பலகைகளை நெடுஞ்சாலை துறையினர் புதுப்பித்தால் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாது என்று வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர். மேலும் சில பகுதிகளில் வழிகாட்டி பெயர் பலகைகள் பராமரிக்க தவறியதால் அழுக்கு படிந்த நிலையில் உடைந்து காணப்படுகின்றன. கோடை சீசனை முன்னிட்டு குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலை மே மாதம் 1-ம் தேதியில் இருந்து ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் குன்னூரில் இருந்து சில சிறிய ரக வாகனங்கள் வண்டிச்சோலை, அளக்கரை வழியாக செல்வார்கள்.

ஆனால் வண்டிச்சோலை அருகே வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி பெயர் பலகை மாசடைந்த நிலையில் உடைந்து காணப்படுகிறது. இதனால் புதிதாக அந்த சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் வழி தெரியாமல் பெரும் சிரமத்தை சந்திக்கக்கூடும் என்பதால் இந்த வழிகாட்டி பலகையை மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் மாசு படிந்த, மங்கிய பெயர் பலகைகளை புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News