அரசு மாதிரி பள்ளி மாணவி முதலிடம்
மோகனூர், ஜூன் 23: உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கவிதை போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை, கலெக்டர் உமா பாராட்டி, கேடயம், சான்றிதழ் வழங்கினார். சாதனை படைத்த மாணவி ஸ்ரீமதியை, பள்ளி தலைமை ஆசிரியர் சுடரொளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Advertisement
Advertisement