விருதுநகர் மாவட்ட காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஜுலை 15: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில ,மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய விருதுநகர் மாவட்ட காவல்துறையினரை கண்டித்து திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் எழுச்சி நாள் கருத்தங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரையும், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளையும் மற்றும் பல பொறுப்பாளர்களையும் கடுமையாக தாக்கி சங்க கட்டடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி அத்துமீறலில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்ட காவல்துறையினரை கண்டித்து திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.