கொடைக்கானல் மன்னவனூரில் ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம்
ெகாடைக்கானல், ஆக. 1: கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூரில் உள்ள தென்மண்டல செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்தில் தோட்டக்கலை துறையின் அட்மா திட்டத்தின் கீழ் மலைக்கிராம விவசாயிகளுக்கான செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி திருமுருகன் தலைமை வகித்து துவக்கி வைத்து செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் தீவன மேலாண்மை பற்றி பேசினார். முதன்மை விஞ்ஞானி ராஜேந்திரன் செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்புக்கான கொட்டகை மேலாண்மை பற்றி பேசினார், கால்நடை மருத்துவர் அபிநயா கால்நடை பராமரிப்பு துறையின் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
Advertisement
Advertisement