அரசு காப்பகத்தில் இருந்த சிறுமி மாயம்
தர்மபுரி, நவ. 16: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள குறிஞ்சி நகர் வள்ளலார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி, அருகில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12ம் தேதி முதல், காப்பகத்தில் இருந்த சிறுமியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பாளர் மணிவண்ணன், தொப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வருகின்றனர். இதனிடையே சிறுமி காணாமல் போனது, குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement