எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
உடன்குடி, ஜூன் 12: உலக எரிவாயு தினத்தை முன்னிட்டு எரிவாயு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் தாண்டவன்காட்டில் நடந்தது. முகாமில் உடன்குடி பிரியா கேஸ் உரிமையாளர் தர்மராஜ், கனகராஜ் ஆகியோர் எரிவாயு பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விளக்கி கூறினர். கேஸ் சிலிண்டர் பணியாளர் ராஜ், கேஸ் கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை வாடிக்கையாளருக்கு விளக்கி கூறினார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் எரிவாயு பாதுகாப்பு விதிமுறைகள் துண்டு பிரசுரம் வழங்கினர்.
Advertisement
Advertisement