தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை பள்ளத்தில் சிக்கிய காஸ் சிலிண்டர் லாரி

 

Advertisement

குன்றத்தூர்: பல்லாவரம் - குன்றத்தூர் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் காலை, மாலை மட்டுமன்றி எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. தற்போது, தாம்பரம் மாநகராட்சி சார்பில் இந்த சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதால், சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எண்ணூரில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை இந்த சாலை வழியாக குன்றத்தூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. பம்மல், கிருஷ்ணா நகர் பிரதான சாலையை கடந்தபோது, சாலை பள்ளத்தில் இந்த லாரி சிக்கியது. இதனால் லாரி எந்நேரத்திலும் கவிழலாம் என்ற அபாயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் குமார், உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்து தப்பினார்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு, 5 பொக்லைன் வாகனங்களை பாதுகாப்பு அரண் போன்று நிறுத்தி, சரிந்து நின்ற லாரியை லாவகமாக நிமிர்த்தி, வெற்றிகரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் யாரையும் அருகில் செல்லவும் அனுமதிக்கவில்லை. சங்கர் நகர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் அரசு பேருந்து மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்றும் அடுத்தடுத்து இதைப்போன்று சாலையில் பதிந்து நின்றது குறிப்பிடத்தக்கது. எனவே, மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பதை தடுக்கும் வகையில், சேதமடைந்து காணப்படும் பல்லாவரம் -குன்றத்தூர் பிரதான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News