வீட்டில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை, ஜூலை 3: கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணசாமி மனைவி அஞ்சம்மாள். நேற்று இவருடைய வீட்டிலிருந்து சிலிண்டரை சமையல் செய்வதற்காக பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனே உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தீயை அணைத்து பெரிய அளவிலான விபத்தை தவிர்த்தனர். இதனால் வெள்ளையூர் கிராமத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.