கந்தர்வகோட்டை அரசு பள்ளி மாணவி வெற்றி
கந்தர்வகோட்டை, ஜூலை 8: தமிழக அரசு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 29 முதல மே 5 வரை ‘தமிழ் வாரம்’ கொண்டாடவும், அதில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்த உத்தரவிட்டது. அதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த போட்டியில் கந்தர்வகோட்டை ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தனுஷ்யா மாவட்ட அளவில் நடைபெற்ற பாரதிதாசன் பிறந்தநாள் விழா போட்டிகளில் கலந்துகொண்டு கவிதை போட்டியில் வெற்றிபெற்றார்.
மாணவிக்கு, கலெக்டர் அருணா பரிசு வழங்கினார். மாவட்ட அளவிலான பரிசு பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, மேலாண்மைகுழு, பெற்றோர்ஆசி ரியர் கழகம் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பாராட்டினர். தலைமை ஆசிரியர் கூறுகையில், மாணவி தனுஷ்யா கவி தை எழுதுவதிலும், பேசுவதிலும் திறமை மிக்கவர் என்றார்.