புதுக்கோட்டையில் விடுதலைப்போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தி நினைவு நாள்
புதுக்கோட்டை, மார்ச் 29: புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தி நினைவு நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற முன்னாள் தலைவருமான துரை.திவியநாதன் தலைமையில் மூத்த வழக்கறிஞரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சந்திரசேகரன்,
விவசாய சங்க மாநில செயலாளர் தனபதி, மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவர் சூர்யா பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள (கோர்ட்) தீரர் சத்தியமூர்த்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் தீரர் சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பலர் கலந்துகொண்டனர்.