பரமக்குடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
பரமக்குடி, ஏப்.23: பரமக்குடி நகராட்சியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுருதி மருந்தகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பரமக்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுருதி மருந்தகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் குணா முன்னிலை வகித்தார்.
Advertisement
இம்முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரத்தம்,சக்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. இருதயம், பொது மருத்துவம், இயல் மருத்துவம் என பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் மருத்துவர் விக்னேஷ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement