கலைஞர் பிறந்த நாள் விழாவில் அன்னதானம்
ராயக்கோட்டை, ஜூன் 5: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கெலமங்கலம் பேரூர் செயலாளர் தஸ்தகீர், மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் Aதலைமை வகித்தனர். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, அன்னதானத்தை ெதாடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், கருணாநிதி, அலெக்ஸ், ஆனந்தன், சாதிக்பாஷா, விஜயஸ்ரீ, அப்துல்காதர், முனிராஜ், ஆஷாபீ மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement