முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பம்
சிவகங்கை, ஆக. 2: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பிட்டீன்படி வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும்.
Advertisement
இதில் தமிழக அரசின் மானியமாக 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை பெறலாம். வங்கிகள் மூலம் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் 3 சதவீத வட்டி மானியம் பெறலாம். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வணிக வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீடும், எஸ்.சி பிரிவினருக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்படும்.
Advertisement