கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கறம்பக்குடி, ஜூலை 9: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கருக்கா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், விவசாயி, இவரது, வளர்த்து வந்த ஆடு ஒன்று நேற்று மதியம் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, அருகே உள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதுகுறித்து, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கருப்பையா தலைமையிலான வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.