பட்டாசு திரிகள் பறிமுதல்
Advertisement
விருதுநகர், ஜூலை 2: விருதுநகர் அருகே அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன்(59), குமரேசன்(61), மோகன்குமார்(33). இவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில்அனுமதியின்றி வைத்திருந்த 33 குரோஸ் பட்டாசு திரிகளை ஆமத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement