முசிறி அருகே நானல் குத்து தீப்பற்றி எரிந்து ரூ.50,000 மின்சாதனங்கள் சேதம்
தொட்டியம், ஜூலை 11: முசிறி அருகே நான்குத்து தீப்பற்றி எரிந்ததில் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் உள்ள ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மின் வயர், குழாய்கள் சேதமானது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுபுத்தூர் பகுதியில் உள்ள ஆலம்பாளையம் புதூரில் விவசாயி சக்திவேல், குப்புசாமி ஆகியோருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்து அறுவடை செய்த நிலையில், தோட்டத்தில் நானல் மற்றும் புதர்கள் முளைத்து புதர் மண்டி கிடந்தது.
மர்ம நபர்கள் இந்த நானல் புதருக்கு தீ வைத்ததால், காற்றின் வேகத்தில் மளமளவென தீப்பற்றி நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள மின்வயர் மற்றும் குழாய்கள் அனைத்தும் எரிந்தது. தீயில் மின்வயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது, காற்றில் அதிக அளவு தீ பரவி விடும் என அச்சத்தில் இருந்தனர், தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.