வேன் மோதி பெண் விரிவுரையாளர் பலி
நிலக்கோட்டை, செப்.10: செம்பட்டி ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் மித்யா (41). இவர், காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பணிக்காக, தனது டூவீலரில், செம்பட்டியில் இருந்து காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
Advertisement
அப்போது வத்தலகுண்டு- செம்பட்டி சாலையில், செம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த வேன், டூவீலர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement