15ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், ஜூலை 11: கோட்டாட்சியர் அலுவலகங்களில் 15ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஜூலை 15 காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. விவவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர்களிடம் நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.