அம்பையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
அம்பை,ஜூன் 12: அம்பையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குநர் இளையராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அம்பாசமுத்திரம், துணை இயக்குநர் அலுவலகக் கூட்ட அரங்கில் நாளை (ஜூன் 13) காலை 11 மணிக்கு துணை இயக்குநர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அம்பை, பாபநாசம் மற்றும் கடையம் பகுதி விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.