வருவாய் கோட்ட அளவில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவள்ளூர், ஜூலை 11: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் இன்று காலை 10 மணிளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சப்-கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.