விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம்
நாமக்கல், ஜூலை 25: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் உமா தலைமையில், நாளை (26ம்தேதி) காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், பருத்தியில் அடர்நடவு சாகுபடி முறை குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க உள்ளனர். இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு, வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement