நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.23ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லை, ஆக. 20: நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2024ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக.23ம் ேததி காலை 11 மணிக்கு கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது. கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடக்கும் கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement