ஒரத்தநாடு அருகே விவசாயி மர்மசாவு
ஒரத்தநாடு, ஜூலை 10: ஒரத்தநாடு அருகே தென்னந்தோப்பில் விவசயி மர்மமாக இறந்துகிடந்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தில் வசிப்பவர் சிவக்குமார் (58). விவசாயி. இவர் தனக்கு சொந்தமாக தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தார் வெளியூர் சென்றுள்ளனர். இரண்டு நாட்களாக சிவகுமாரின் நடமாட்டம் இல்லாததால் அருகில் உள்ளவர்கள் தென்னந்தோப்பில் உள்ள கூரைக்கொட்டகையில் சென்று பார்த்தனர்.
அப்பொழுது மர்மமான முறையில் அழிந்து நிலையில் சிவக்குமார் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த பாப்பான் நாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் இறந்து கிடந்த சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கபப்ட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.