கண்தான விழிப்புணர்வு முகாம்
சிங்கம்புணரி, ஜூன் 12: சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமை மருத்துவர் அயன்ராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் இந்தியன் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். தனியார் கண் மருத்துவமனை கண்தான மேலாளர் சரவணன் பேசும்போது, அனைத்து தரப்பினரும் கண்தானம் வழங்கலாம், வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் குறித்து யாருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது. கண்தானம் வழங்கினால் பலரது வாழ்வில் ஒளி ஏற்றப்படும் என பேசினார்.
இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம், நகரச் செயலாளர் கதிர்வேல் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் கண்களை தானமாக வழங்கினர்.