ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 4 நாட்கள் விடுமுறை
ஈரோடு, ஆக. 30: ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் 2025-2028ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தலில் தற்போதைய தலைவர் ரவிசங்கர், செயலர் சத்தியமூர்த்தி மற்றும் பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி சங்கத்தின் ஆண்டு பொது மகாசபை கூட்டத்தில் இவர்கள் பதவி ஏற்க உள்ளனர். இதனால் செப்.4ம் தேதி ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஈரோடு நகரின் அனைத்து மஞ்சள் ஏலங்களிலும், வணிகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். அதைத்தொடர்ந்து, செப்.5ம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறையும், வழக்கமான விடுமுறை நாட்களாக 6ம் தேதி (சனிக்கிழமை), 7ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை விடுக்கப்படுகிறது. இத்தகவலை மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.