கர்நாடக மாநில மது கடத்தியவர் கைது
ஈரோடு, செப். 27: ஈரோடு மாவட்டம், கடம்பூர் போலீசார் நேற்று முன்தினம் கோட்டமாளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர்.
Advertisement
அதில் அவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த கர்நாடக மது பாக்கெட்டுகள் 10ஐயும் பறிமுதல் செய்தனர்.
Advertisement