ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு, செப். 27: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 8 மணி வரை ஈரோடு, பவானி நகர்களை தவிர்த்து, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி, ஈரோடு மாவட்டத்தில் பெய்துள்ள மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
மொடக்குறிச்சி 1.20, கொடுமுடி 7, பெருந்துறை 10, சென்னிமலை 1.40, கவுந்தப்பாடி 8.80, அம்மாபேட்டை 6.20, வறட்டுப்பள்ளம் அணை 16, கோபி 4.30, எலந்தக்குட்டை மேடு 1.60, கொடிவேரி அணை 2.40, நம்பியூர் 10, சத்தியமங்கலம் 3, பவானிசாகர் 3.40, தாளவாடி 5.40. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 28.60 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 109.30 ஆக பதிவாகி இருந்தது.