“உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்
ஈரோடு, செப்.26: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரம்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை பார்வையிட்ட அமைச்சர் சு.முத்துசாமி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
Advertisement
இதில், மனு அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணை, மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இம்முகாமில், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டல குழுத்தலைவர் சசிகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement