அதிகளவில் மது குடித்த தூய்மைபணியாளர் பலி
ஈரோடு, ஆக. 23: ஈரோடு நேதாஜி சாலை முனிசிபல் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர் (60). இவர், மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேகருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 20ம் தேதி மாலை சேகர், ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள தம்பிக்கலைஐயன் கோவில் பகுதியில் அதிக மதுபோதையில் மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது.
Advertisement
இதன்பேரில், சேகரின் குடும்பத்தினர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement